Skip Navigation Linksdefault

அவசியம் அதேசமயம் அதிமுக்கியம்!

சகோதரி சுனித்தா சுகுமார்

 கணவன் - மனைவி அன்பு, அம்மா - பிள்ளை அன்பு, பெற்றோர் - பிள்ளை கள் அன்பு, சகோதர அன்பு, நண்பரின் அன்பு... இப்படி ஒவ்வொரு உறவிலுமே ஆழமாய் வேர் கொண்டிருந்த உண்மை அன்பு அற்றுப்போய் மேலோட்ட அன்பு, சுயநல அன்பு, மாய்மால அன்பு, ஆதாய அன்பு என்ற போலி அன்பையே இப்போது பார்க்க முடிகிறது. நாம் வாழுகிற இக்காலம் தேவனால் கொடிய காலங்களாக முன் னறிவிக்கப்பட்ட கடைசி காலம் என்பதை அது உறுதிப்படுத்துகிறது. கடைசி நாட் களில் அன்பு தணிந்துபோகும் என்றும், சுபாவ அன்பில்லாதவராய் இருப்பார்கள் என்றும் என்றோ தேவன் முன்னறிவித்து விட்டாரே (மத்.24:12, IIதீமோ.3:1-3).

இப்படி மாறுகிற மனித அன்பின் நடுவே மாறாத அன்பிற்கு எடுத்துக் காட்டு இயேசுவே. அன்பின் உச்சக்கட்டம், அன்பின் எல்லை, அன்பின் சிகரம், அன்பில் உண்மை என சுட்டிக்காட்டக் கூடிய ஒரே ஒருவர் இயேசுவே! பிதா தம் ஒப்பற்ற அன்பை இயேசுவை நமக்கு ஈவாக கொடுத்து காண்பித்தார். இயேசு தம் விலையேறப்பெற்ற அன்பை தம் ஜீவனையே சிலுவையில் கொடுத்து வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தம் அசாதாரண அன்பை நம் இருதயங்களில் ஊற்றிக் கொடுத்து தெய்வீக அன்பை பிரதிபலிக்க வைக்கிறார்.

    'அறிந்திருக்கிற' வரிசையில் அன்பு குறித்து தேவன் அருளும் வாக்கு,

'அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து,    அவரை அறிந்திருக்கிறான்' (Iயோவான் 4:7) என்பதே!

உலகத்தாரின் அன்பு மாறிப்போவதை பார்க்கிற தேவபிள்ளைகளான நாம், மாறாத தெய்வீக அன்பை பிரதிபலித்து முத்திரை பதிப்போம்! உலகம் சொல்லுகிற மனிதாபிமான அன்பை அல்ல, அபூர்வமான தெய்வீக அன்பை நம்மால் நேசிக்கமுடியா தோரிடத்தில் காண்பித்து தெய்வீக அன்பிற்கு சான்றாவோம்! சகோதர அன்பு என் பதை எல்லோரைப்போலும் அல்ல, எல்லாரையும்விட மேன்மையாய் வெளிப்படுத்திக் காட்டியோர்குறித்து இச்செய்தியில் வாசிக்கவிருக்கிற நாம், எந்த உறவாயினும் அதன் நடுவே ஆச்சரியப்படுத்துகிற அசாதாரண தேவ அன்பை விளங்கசெய்வோம்!

                            

              அன்பு எனும் அடையாளம்!     

 

'நான் அன்பு எனும் அடையாளத்துடன் நடமாடியவர்' என்ற அறிமுகத்துடன் நம்முன் வருகிற மேன்மைமிக்க ஆபிரகாம் அவர்களோடு ஒரு சந்திப்பு...

நிருபர்: உறவுகளாய் கூடி, கூட்டாய் குடியிருக்கையில் உறவு பிரச் சனையை தவிர்க்கமுடியாது என்பது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

ஆபிரகாம்: எந்த உறவின் பின்னணியிலும் நெருங்கிப் பழகுகிறபோது உரசல்களும், உராய்வு களும் உண்டாகக் கூடும். ஆனால் உறவு என்பது என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டிய முக் கியமானது என்பதால் அது துண்டிக்கப்படாமல், முறிந்துவிடாமல் கவனமாய் காக்கப்பட வேண்டும். தெய்வீக அன்பு இழையோடுவதுமட்டுமே, உறவுப் பாலத்தில் விரிசலை அனுமதியா மல், இடைவெளி விடாமல் தாங்கி, சகித்து, பொறுத்து, இணங்கி நடக்க காரணமாகும்.

நிருபர்: அடித்தள மனத்தாங்கல்தான் நீங்கள் லோத்தைவிட்டு பிரிந் திட காரணமா?

ஆபிரகாம்: நானும் லோத்தும் பிரிந்து விடும்படியே எங்கள் உறவுகுறித்து அந்த கட்டத் தில் தேவன் முன் குறித்திருந்தார். அதே சமயம் காரசார விவாதம் ஏற்பட்டு மனத்தாங் கல், மனவேதனை இவற்றுடன் நாங்கள் நிரந்தரமாய் பிரிவது தேவ திட்டம் அல்ல என் பதை புரிந்துகொண்டேன். எனக்கும், லோத்துக்கும் இடையே எந்த உறவு பிரச்சனையும் இல்லை. அடித்தளத்தில் எங்கள் மேய்ப்பருக்கும், லோத்தின் மேய்ப்பருக்கும் விவாதம் உண்டானது. அந்த கசமுசாக்கள் இரு தரப்பிலும் வெவ்வேறு தகவல்களை கொண்டு வந்தது. அதை பொிதுபடுத்தி வழக்காட நாங்கள் விரும்பவில்லை.

நிருபர்: உறவுகளுக்குள் இன்று காரசார விவாதங்கள் சகஜமாய் இருக்கிறதே, நீங்கள் எப்படி விவாதங்களை தவிர்த்தீர்கள்?

ஆபிரகாம்: வாக்குவாதம் வந்தபின்னர் பழைய உறவு நிலைக்கு திரும்ப கால அவகாசம் ஆகும். வாக்குவாதத்தின்போது ஒருவர் மீது ஒருவர் அடுக்கும் வார்த்தைகள் மனக் காயத்தை ஏற்படுத்தும். அது எளிதில் ஆறாது. வார்த்தைகளை உணர்ச்சி வெள்ளத்தில் வீசி உறவுகளுக்குள் நிமிடங்களில் பிரிவினையை ஏற்படுத்த முடியும். ஆனால் வீசிய வார்த்தை களின் வீரியம் அமரவும், காயங்கள் ஆறவும், உறவுகள் இணையவும் காலங்களாகி விடும்! ஆகவே வார்த்தைகளை வீசி நியாயத்தை நிலைநிறுத்த முடியாமற் போனாலும் வார்த்தைகளை தவிர்த்து உறவுகளை நிலைநிறுத்துகிற அன்பு போதும் என தீர்மானித் தேன்.' 'நமக்குள் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர்' என்பதே என்றும் என் நிலைப்பாடு. அதனால்தான் வாக்குவாதங்களை தவிர்த்தேன்.

நிருபர்: தட்டிக்கேட்குமளவு வயதும், நியாயமும் இருந்தாலும் எப்படி விட்டுக் கொடுப்பவராக உங்களால் இருக்க முடிந்தது?

ஆபிரகாம்: நான்தான் வயதில் மூத்தவன். நான்தான் கூடுதல் வசதியுடையவன். நான் தான் தேவதரிசனம் பெற்று புறப்பட்டவன். அதனால் நான்தான் தெரிந்தெடுப்பேன் என்ற நியாய உணர்வு எனக்குள் மேலெழும்பாததற்குக் காரணம், அன்புதான்! அன்போடு விட்டு கொடுப்பவர் என்றும் கெட்டுப்போவதில்லை என எனக்குத் தொியும். எனக்கென்று தேவன் நியமித்திருப்பது என்னை தேடிவரும், அதை நான் விரட்டிப் பிடிக்க தேவையில்லை என் பதால் வலப்பக்கமா, இடப்பக்கமா எங்கு போவது என லோத்து தெரிந்தெடுக்க முன் னுரிமை அளித்தேன். உறவில் அன்பிற்கு முன்னுரிமை அளித்ததால் முறிந்த உறவாக வேண்டியது, தொடருகிற உறவானது!

நிருபர்: என்றும் உங்கள் அன்பு லோத்தின்மேல் மாறாதிருக்க கார ணம் என்ன? அன்பு தொடர உங்கள் ஆலோசனை என்ன?

ஆபிரகாம்: நிரந்தரமாய் மனவேதனையோடு லோத்தை விட்டு பிரிகிறோம் என்ற அளவில் எங்கள் பிரிவு அமையவில்லை. காரணம் நியாயம் பேசாமல், சண்டை போடாமல், காரசார வார்த்தைகளை வீசாமல், உரிமையை வலியுறுத்தாமல்…அன்பை முக்கியப்படுத்தியதால் எங்கள் பிரிவிலும், பிரிவிற்கு பின்னரும் எங்கள் உறவு நிலைத்திருந்தது. அதனால்தான் லோத்து பிடிபட்டதைக் கேள்வியுற்றதும் விரட்டிப்போய் வேண்டியதை விரைவாக செய் தேன். அதேபோல் லோத்து குடியிருக்கும் இடம் அழிக்கப்படவிருக்கிற தேவனின் முன் னறிவிப்பைக் கேட்டதும் தேவனிடம் மன்றாடி பரிந்துபேசி நின்றேன். இரத்த பந்தமே என் றாலும் அந்த பந்த பாசம் என்றும் தொடர மனிதாபிமான அன்புமட்டும் போதாது, அன்பின் அடையாளமாக விட்டுக்கொடுக்கவும் இறங்கிப்போகவும் தேவ அன்பு தேவை.

அன்புள்ள தேவனை நாம் அறிந்திருக்கிறோம். எல்லையே இல்லாமல், எதை யும் எதிர்பார்க்காமல், எதிர்மாறாக நடந்தபின்னும் நம்மை அவர் நேசிக்கிறார். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங் கள்(யோவா.13:34) என்று இயேசு மாதிரி காட்டி அதில் நடக்க சொல்லியிருக் கிறார். இயேசு காட்டுகிற இணையற்ற அன்பு எப்படிப்பட்டது என உலகத்தாருக்கு தொியாது. இயேசுவின் அன்பை அனுபவித்திருக்கிற நமக்குதான் தெரியும். அவர் கள் இயேசுவின் அன்பை அறியவேண்டுமானால் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பு, அவரை பின்பற்றுகிற நம் ஒவ்வொருவரின் அடையாளமாக இருக்கவேண்டும்.

'நான் தேவனால் பிறந்தவர்' என்ற அறிமுகமுடைய நம் தோற்றம், பார்வை, சொல், செயல் அனைத்திலும் தேவ அன்பு இழையோடி இருக்க வேண்டும். மனி தாபிமான அன்பின் அடிப்படையில் உலகத்தார் காண்பிப்பதைக் காட்டிலும் கூடுத லாக அன்பை வெளிப்படுத்த வேண்டும். உறவுகள் எளிதில் உடையக் கூடியது. சக லத்தையும் சகிக்கும் தெய்வீக அன்போடு உறவுகளை பாதுகாக்க வேண்டும். பகை விரோதங்களை எழுப்பும், அன்போ சகல பாவங்களையும் மூடும்(நீதி.10:12). நியா யத்தை விட்டுக்கொடுப்பது, உரிமையையும் வலியுறுத்தாமல் விட்டுவிடுவது, பாதிப் பவருக்கும் பதில் செய்யாதிருப்பது...இப்படி அனைத்திலுமே கூடுதலாய் செய்கிற அடையாளமே, அன்பு இயேசுவின் பிரதிநிதியான நம்மிடம் பிரதிபலிக்கவேண்டும்.

ஒரு சிறுவன் மாமரத்திலிருந்த கனியை எடுக்க எறிந்த கல், தவறுதலாக அச்சமயத்தில் அந்த வழியாக மாறுவேடத்தில் வந்த மன்னன்மேல் பட்டது. மன்ன னிடம் அந்த சிறுவன் கொண்டுவரப்பட்டான். பயந்து நடுங்கியபடி நின்ற அவனிடம் மன்னன், 'நீ மரத்தின்மேல் கல் எறிந்ததற்கு, மரம் உனக்கு கனியை கொடுக்கு மானால் நான்மட்டும் உனக்கு கசையடி கொடுக்கலாமா? என்மேல் பட்ட கல்லுக்கு பதிலாக உனக்கு தங்கக்காசுகள் கொடுக்கிறேன்' என கொடுத்தனுப்பினாராம். பதி லுக்கு பதில் செய்யும் மனித இயல்பை நாமும் செய்வது அல்ல. 'நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு'(ரோம.12:21) என்றபடி தெய்வீக அன்பை பிரதிபலிக்க தேவஅன்பால் நம் உள்ளங்கள் நிறைந்திருக்க வேண்டும்.

உரிமையையும் நியாயத்தையும் பேசி விட்டுகொடுக்க மனமின்றி இருப்ப தால் எத்தனை உறவுகளில் அன்பு பிளவுபட்டு நிரந்தர பிரிவினையாகிவிட்டது! உறவை எதற்காகவும் துச்சமாய் தூக்கி எறியாதீர்கள். 'நீங்கள் வாழ்வில் கடந்துவந்த உறவு பாலத்தை உடைத்துவிடாதீர்கள். அது என்றும் உங்களுக்கு அவசியமானது' என்கிறார் ஒருவர். உறவை காக்க கவனமாயிருந்த ஆபிரகாமைப் பாருங்கள். உறவுக்காக சுய கௌரவம், சுய மதிப்பு இவற்றை இழக்க யோசிக்காதீர்கள். உறவு கள் என்றும் அன்போடு தொடர தேவ அன்பு முதலாவது நமக்குள் ஊற்றப்பட வேண்டும். தேவ அன்பின் அடையாளமே நம் உறவிற்கு வலிமை!

அன்பு எனும் ஆதாரம்!


தெய்வீக அன்பு எனும் அடையாளமே, நாம் தேவனை அறிந் திருக்கிறோம் என்பதற்கும், தேவனால் பிறந்திருக்கிறோம் என்பதற்கு மான வெளியரங்க வெளிப்பாடு!

'நான் அன்பு எனும் ஆதாரத்துடன் நடந்துகொண்டேன்' என்ற சுய அறிமுகத்துடன் நம்முன் வருகிற கனத்துக்குரிய மோசே அவர்களுடன் ஒரு சந்திப்பு...

நிருபர்: உங்கள் மிரியாம் அக்கா தங்கள் மதிப்பை இழந்தது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மோசே: என்னைவிட வயதில் மூத்த, என் உயிர் பாதுகாக்கப்பட கருவியாய் பயன்பட்ட என் அக்காவின்மேல் என்றும் எனக்கு மதிப்பும் மரியாதையும் குறையவில்லை. அதே சமயம் எல்லாருக்கும் முன் அவர்கள் தரம் தாழ்ந்துபோகக் காரணம், தேவையில்லா மல் எனக்கு விரோதமாய் பேசிய வார்த்தைகள்தான். என்னைப் பற்றி என்பதற்காக சொல்ல வில்லை, அடுத்தவர்களைக் குறித்து அவசியமின்றி அவசரமாய் தீர்ப்பிட்டதால்தான் அக்கா தன் மதிப்பை இழக்க நேரிட்டது.

நிருபர்: விளையாட்டாய் பேசினது வினையாய் திரும்பினதோ?

மோசே: என் குடும்ப காரியங்களைக் குறித்து என் அண்ணனும், அக்காவும் கசமுசா என பேசிக்கொள்வது தெரிந்தது. ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களை தேவனின் காதுகள் கவனித்துக்கொண்டிருப்பதைக் குறித்து அவர்கள் யோசியாமற் போனதே காரியம். அவர்கள் பேசிக்கொண்டது தேவனின் காதுகளை எட்டியதால் விஷயம் வினையானது. என்னையும் தாண்டி காரியங்கள் மேலிடத்திற்கு போய் விட்டது.

நிருபர்: அண்ணனும் அக்காவும் உங்களைப் பற்றி பேசிக் கொண் டதைக் குறித்து அறிந்ததும் என்ன செய்தீர்கள்?

மோசே: யாரோ ஒருவர் அல்ல... என்னை அறியாதவர்கள் அல்ல… என் அண்ணனும் அக்காவுமே என்னைப் புரியாமல் பேசுகிறார்களே என்ற வருத்தம் எனக்கிருந்தது. சரி.. நாளடைவில் அவர்கள் புரிந்துகொள்வார்கள் என அமைதியாயிருந்தேன். அவர்களை நான் நேசித்ததால், அவர்களைக் குறித்து நான் தேவனிடம் ரிப்போர்ட் பண்ணவுமில்லை, அவர்களை உணரவைக்க முயற்சிக்கவுமில்லை.

நிருபர்:ஒருவர் பாதிக்கப்பட்டதைக் கேள்வியுற்றதும் என்னை துக்கப் படுத்தியதால்தான் தேவன் இப்படி அனுமதித்திருக்கிறார் என சுயநீதி யுடனும், சுயபெருமையுடனும் மறைமுக பெருமிதத்தோடு மார்தட்டுவதை பார்த்திருக்கிறேன். நீங்க எப்படி வித்தியாசமாய் நடந்துகொண்டீர்கள்?

மோசே: நான் எதைக்குறித்தும் அதிகம் கருத்து தெரிவிக்கவோ, பேசிக்கொள்ளவோ செய்கிற சுபாவமுடையவர் அல்ல என்பதால்தானோ என்னவோ தேவன் என்னை பூமி யிலுள்ளோர் அனைவரிலும் மிகுந்த சாந்தமுள்ளவன் என்றார். நான் மனமுடையும்படி மனம்நோக பேசிய அக்காவிற்கு இந்த ஒழுங்கு நடவடிக்கை தேவைதான், அவளை உணரவைக்க இது அவசியந்தான் என நான் சந்தோஷப்படவில்லை. அக்காவை தேவன் மன்னித்து இரங்க வேண்டுமே என அவர்கள்மேல் நான் வைத்திருந்த அன்பின் நிமித்தம் என் மனம் ஏங்கியது. தேவன் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை வாபஸ்பெற அதனால்தான் என் அக்காவிற்காக மன்றாடி தேவ சமுகத்தில் நின்றேன்.

நிருபர்: அன்பு எனும் ஆதாரத்தில் நிற்க உங்கள் ஆலோசனை என்ன?

மோசே: என்னை பாதிக்கிறவர்கள் பாதிக்கப்படவேண்டும், அவர்கள் பாதிக்கப்படுவதை நான் பார்க்கவேண்டும் என்ற மனப்பாங்கு அன்பான இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு இருக்கக் கூடாதது. அன்பு தீங்கு நினையாது'என்ற மனப்பாங்கு குறைந்துகொண்டே போவ தால்தான், இன்றைய நாட்களில் பழிவாங்கும் உணர்வு மேலோங்கி நிற்கிறது. எவருக் கும் என்றும் எதற்காகவும் தீங்கு நினைக்காத தெய்வீகஅன்பு என்ற ஆதாரத்தில் நின் றால், நீங்களும் நன்றாயிருப்பீர்கள், உங்களோடிருக்கிற எல்லாரும் நன்றாயிருப்பார்கள்.

அன்புள்ளவன் தேவனை அறிந்திருக்கிறான்...தேவனை அறிந்தவன் அன் பாயிருப்பான். தேவன் என்னை நேசிக்கணும், என்னை பொறுத்து பெருந்தன்மை யோடு நடந்துகொள்ளவேண்டும், என்னை மன்னித்து ஏற்க வேண்டும் என எதிர் பார்க்கிறோமே. அப்படியானால் நம்மை நாம் நேசிப்பதுபோல மற்றவர்களை நாம் நேசிக்க வேண்டுமே! அதுவே ராஜரீக பிரமாணம்(யாக்.2:8).

      மோசேக்கு விரோதமாய் மிரியாமும் ஆரோனும் பேசியதைக் கேட்ட கர்த்தர், மோசே அமைதியாய் அதை விட்டுவிட்டாலும் அவர் விடுவதாக இல்லை. என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச உங்களுக்கு பயமில்லாமற்போனதென்ன (எண்.12:8) என கேள்வியெழுப்பி அதிரடி நடவடிக்கையாக 'குஷ்டரோகம்' என்ற தண்டனையையும் மிரியாமுக்கு உடனே கொடுத்தார். மோசேயின் நிலையில் வேறு எவர் இருந்தாலும் 'எனக்கென்று பேச எவருமில்லை.. என்னை என்ன வேண்டு மானாலும் தீர்ப்பிட்டு நியாயந்தீர்த்துக்கொள்ளலாம் என நினைச்சு நீங்கள் பேசியதற்கு வட்டியும் முதலுமாய் தேவனே செய்துவிட்டார்' என்றே பெருமை பாராட்டியிருப்பர்.

      அடுத்தவருக்கு எதிர்மறையாய் நடப்பவைகள் ஒவ்வொன்றிற்கும், தேவன் தங்கள் பட்சமாய் நின்று எடுத்த நடவடிக்கை என தாங்களாகவே எடுத்துக் கொண்டு, 'தங்களை ஏதாவது செய்தால் தேவன் சும்மாவிடமாட்டார்' என கருத்து தெரிவிப்பவ ருண்டு. தன் சகோதரி பேசியதுகுறித்து ரிப்போர்ட் பண்ணாமல், அவர்களுக்கு நேர்ந் தது பற்றி சந்தோஷப்படாமல் நடந்த மோசே நமக்கு நல்ல மாதிரி. தேவ அன்பின் திரட்சியை அனுபவித்து நாம் நிர்மூலமாகாமல் வாழ்ந்திருப்பது மிக பெரிது. தேவ அன்பின் ஆதாரத்தில்தான் நாம் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறிவுக் கெட்டாத அளக்கவும்முடியாத தேவஅன்புதான் நாம் ஆசீர்வதிக்கப்படவும், வாழ்ந் திருக்கவும், இன்று நாம் இருக்கிற நிலையை எட்டவும் ஒரே காரணம். இவைகள் எதுவும் நம் தகுதியால் பெற்றது அல்ல என்பதால் தேவஅன்பிற்காக நன்றியோடு தாழ்மையா யிருப்பதோடுகூட, சகமனிதரிடத்திலும் அதே தேவஅன்பை வெளிப்படுத்துவோம்.

      பிறரின் கஷ்டநஷ்டங்களில் காரணம் கண்டுபிடிக்கவோ, தீர்ப்பிட்டு பேசவோ தேவன் நம்மை வைக்கவில்லை. அவர்களுக்காய் பரிதாபப்பட்டு முடிந்த அளவு உதவி செய்யவே தேவன் நம்மை வைத்திருக்கிறார். எவரையும் வெளியரங்க சொல், செயல் கொண்டு நிதானிக்க முடியாது. இருதயத்தை பார்க்கும் தேவனுக்குமுன் குற்றமற்ற வரை நாம் நியாயந்தீர்த்தால், அவர்களை நியாயந்தீர்த்த நாம்தான் குற்றவாளியா வோம்! தேவஅன்பு பிரவாகமாய் நம் இருதயங்களில் ஊற்றப்படட்டும். தீங்கு நினை யாத தேவஅன்பு நம் இருதயங்களை நிரப்பட்டும்! தேவனை அறியாதோர் சுபாவ அன் பின்றி நடந்துகொண்டாலும் தேவனால் பிறந்த நாம் தேவஅன்பை பிரதிபலிப்போம்.

      தேவ அன்பை வெளிப்படுத்தும் ஆதாரமே, நாம் தேவனை அறிந்திருக்கிறோம் என்பதற்கும், தேவனால் பிறந்திருக்கிறோம் என்ப தற்கும் வெளியரங்க வெளிப்பாடு!

 அன்பு என்னும் அளவுகோல்!

                              

'அன்பு எனும் அளவுகோல் என்னை தேவமனிதனாய் வலம்தது' என்ற சுயஅறிமுகத்துடன் வருகிற மதிப்பிற்குரிய யோசேப்பு அவர்களுடன் சந்திப்பு...

நிருபர்: உதவிதான் செய்யவில்லை..உபத்திரவமாவது கொடுக்காதிருக் கலாமே என உங்கள் உடன்பிறந்தார் பற்றி நீங்கள் எண்ணியதுண்டா?

யோசேப்பு: என் உடன்பிறந்தோர் எனக்கு உதவவேண்டுமே, அவர்கள் உதவ வில்லையே என நான் வருத்தப்பட்டதில்லை. அவர்களை நேசித்த நான் துன்மார்க்க வழிகளைவிட்டு அவர்கள் விலக விரும்பியே அப்பாவிடம் பேசியிருக்கிறேன்.

நிருபர்: இவர்கள்மட்டும் என்னை விற்றுப்போடாதிருந்தால்..இந்தளவு          அந்நிய தேசத்தில் அவதிப்படும் நிலை எனக்கு வந்திருக்காது எனு மளவு உங்களை பாதித்த சொந்த சகோதரரால் உண்டான மன உளைச்சலிலிருந்து எப்படி வெளிவந்தீர்கள்?

யோசேப்பு: என்னை விற்றுப்போடாதிருந்தால் என்று நான் எப்படி நினைக்க முடியும்? அப்படி இல்லையென்றால் தண்ணீரற்ற வெறுங்குழி அல்லவா என் கல்லறையாகி இருக்கும். 'தேவன்தான் என்னை எகிப்துக்கு அனுப்பினார்' என் பதே என் மனதில் ஊறியிருந்த உண்மை! அதனால் சகோதரர்மேல் துவக்கத் தில் இருந்தே குரோதம், கோபம், வெறுப்பு எனக்கு உண்டாகவே இல்லை. அப்படி இல்லை என்றால் அவர்களை பழிவாங்க நழுவிவந்த வாய்ப்பை மிக சரியாய் நான் பயன்படுத்தியிருப்பேனே. எனக்குள் நிறைந்திருந்த தெய்வீக அன்புதான் என் எண்ணங்களை கட்டுப்படுத்தியது என்றே நம்புகிறேன்.

நிருபர்: உங்கள் நிலையிலிருக்கும் எவரும் சகோதரர் குறித்து புலம்பி தவித்திருப்பர். பானபாத்திரக்காரனிடத்தில் நீங்கள் எகிப்திற்கு வந்தது குறித்து குறிப்பிடும்போதுகூட நீங்கள் சகோதரர்பற்றி புலம்பாதது ஆச்சரியமாயிருக்கிறதே. நீங்கள்மட்டும் எப்படி அப்படி நடந்தீர்கள்?

யோசேப்பு: என் மனதில் சகோதரர்குறித்து வருத்தம், கசப்பு, வெறுப்பு நிறைந் திருந்து அதினிமித்தம் நான் அவர்களை மன்னியாமலிருந்தால் ஆறாத காயத் தோடிருந்திருப்பேன். அப்படியானால் சகோதரர்பற்றி புலம்பி தவித்திருப்பேன். ஆனால் தெய்வீக அன்பு அவர்களை மன்னித்து மறக்கச் செய்ததால், நான் புலம்பிக்கொண்டிருக்கவில்லை அவர்கள் செய்ததை நினைக்கவுமில்லை.

நிருபர்: தெரியாமல் தீமைசெய்தவரை விடலாம், தெரிந்தே தீங்கிழைத்த சகோதரரை நான் விட்டாலும் தேவன் விடக்கூடாது, அவர்கள் எப்படியும் பாதிக்கப்படவேண்டும் என என்றாகிலும் நீங்கள் வேண்டியதுண்டா?

யோசேப்பு: அவர்கள் தெரிந்து தீமை செய்தார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே செய்த தீமை எனக்கு தீமையாக அல்ல, தேவனால் நன்மையாக அல்லவா முடிந்தது? அதனால் என்னை நேசிக்கிற தேவன் நன்மையாக வாழவைத்து, வருத்தத்தை மறக்கும்படி உயர்த்தியதுதான் என் மனதில் பதிந்திருந்ததே தவிர இவர்களை பழிவாங்கணும், உணரவைக்கணும், பாதிக்கப்படணும் என்ற கெட்ட எண்ணம் எனக்குள் எழும்பவேயில்லை.

நிருபர்: அன்பாயிருப்பது குறித்த உங்கள் கருத்து என்ன?

யோசேப்பு: ஒரு தேவபிள்ளைக்குள் இருக்கும் தெய்வீக அன்பு எனும் அளவுகோலின் அடிப்படையில்தான் மற்றவர்கள் செயலை மன்னிக்கவும், மறக்க வும், கசப்பு, வெறுப்பு, குரோதம், பழிவாங்கும் உணர்வு இவைகளை மேற் கொள்ளவும் தக்கதான இயல்பான அன்பிற்கும் அப்பாற்பட்ட அன்புடையவராய் இருக்கமுடியும். தேவனைக் குறித்த அறிவு நமக்குள் சகிப்புத் தன்மையை பெருக்கி, தெய்வீக அன்பை வெளிப்படுத்தும். தேவனால் பிறந்த அனுபவத் தின் உண்மை வெளிப்பாடு, நமக்குள் நல்லெண்ணங்களை பெருக்கி தெய்வீக அன்பை வெளிப்படுத்தும்.

கசப்பும், வெறுப்பும், வைராக்கியமும் பலருடைய உள்ளங்களில் வேரூன்றி வளர்ந்து, 'என்னால் இந்நபரை மன்னிக்கவே முடியாது' என குறிப்பிட்டுக் கூறு வோரின் பட்டியல் நீண்டு கொண்டே போவதை தான் இன்று பார்க்க முடிகிறது. கசப்பையும், வைராக்கியத்தையும் உள்ளத்தில் தேக்கிவைத்திருப்பது என்பது, 'நீங் கள் விஷம் அருந்திவிட்டு எதிரிலிருக்கும் சம்பந்தப்பட்டவர் சாகும்படி எதிர்பார்ப் பது போன்றது' என்கிறார் ஒருவர். அப்படி நடக்கமுடியாதே. கசப்பு, வெறுப்பு, வைராக்கியம் எனும் விஷம் உங்களைத்தான் பாதிக்கும்! இதிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டுமானால், தேவஅன்பு உங்கள் இருதயங்களில் ஊற்றப்படும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேட்கவேண்டும். தேவ அன்பை நாம் அதிகமாய் தியா னிக்க வேண்டும். தேவ அன்புதான் நம் இதயங்களில் மன்னிப்பை ஊற்றும்!

இந்த மனிதரால்தான் நான் பாதிக்கப்பட்டேன். என் பாதிக்கப்பட்ட கடந்த காலத்திற்கு முக்கிய காரணம் இந்நபரே என்று சொல்லியே நாட்களை வீணாக்கி விடாதீர்கள். நம்மை பண்படுத்த தேவன் அந்நபர்களை சில காலம் பயன்படுத்த லாம். அனுமதித்திருக்கிற தேவன் இதன் பின்னணியில் செயல்பட்டுக் கொண் டிருக்கிறார் என நாம் விளங்கியிருந்தால், நாம் எவரையோ காரணங்காட்டி நமக் கென தேவன் ஆயத்தப்படுத்தியிருக்கும் நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இழக்கமாட்டோம். தேவஅன்பும், தேவனோடு நாம் கொண்டிருக்கும் நெருக்க முமே மனுஷீக நினைவிற்கு அப்பாற்பட்ட மன நிறைவை நமக்கு அளிக்க முடியும்.

மன்னிப்பிற்கு மாதிரியாயிருந்த யோசேப்பைப்போல என்னால் இருக்கமுடி யாது என நாம் ஒதுங்கமுடியாது. யோசேப்பினால் இந்தளவு மன்னிக்கமுடியும் என் றால் தேவஅன்பின் ஆளுகைக்குட்பட்ட நம்மாலும் மன்னிக்கமுடியும் என்பதுதானே நடைமுறை! தேவஅன்பு இன்னும் நமக்குள் தேவை என்பதையே நம் அன்பு தாழ்ச்சியின் வெளிப்பாடான மன்னியாமை, கசப்பு, வைராக்கியம், குரோதம், பழிவாங்க துடிப்பு அனைத்தும் காட்டுகிறது.

இயேசுவைக்குறித்து நாம் பெற்றிருக்கிற அறிவு போதாது. இயேசுவின் அன்பைக் குறித்து நாம் விளங்கியிருப்பதும் போதாது. தேவனால் பிறந்ததின் விளைவாக நமக்குள் உண்டாகி இருக்கும் சுபாவ மாற்றங்களும் போதாது. அத னால்தான் நம் அன்பின் அளவு இன்னும் தெய்வீக பண்புகளை காட்டவில்லை. தேவ அன்பு வெறுமையான வறண்ட நம் இருதயங்களை நிரப்பட்டும்.

தேவ அன்பைக் குறிக்கும் அளவுகோலே, நாம் தேவனை அறிந் திருக்கிறோம் என்பதற்கும், தேவனால் பிறந்திருக்கிறோம் என்பதற்குமான வெளியரங்க வெளிப்பாடு!

நாம் அன்பின் சிகரமான தேவனை அறிந்திருக்கிறவர்கள், பழைய பாவ சுபாவங்களை விட்டு மறுபடியும் பிறந்தவர்கள் என்பதை நம் சொல், செயல் அனைத்திலும் தெய்வீக அன்பை பிரதிபலிப்பதின்மூலம் காட்டுவோம்!

​​flipreader.pngcalendar.pngconnect.png​ ​